புதன், 10 அக்டோபர், 2012

அன்னை ஹாஜர்(அலை) அவர்களின் தியாகம் (படிப்பினை பெறும் பாடம்).




ஏக இறைவனின் திருப்பெயரால்....

رَّبَّنَا إِنِّي أَسْكَنتُ مِن ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُواْ الصَّلاَةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُم مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ {37}

14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246

அன்னை ஹாஜர்(அலை) அவர்களின் தியாகம் (படிப்பினை பெறும் பாடம்).

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு காரியத்தை நிகழ்த்த நாடினால் ஆகுக என்றுக் கூறிய  உடன் ஆகி விடும் சில காரியங்களை மக்களில் சிலருடைய அன்றாட வாழ்வில் நிகழக் கூடிய சம்பவங்களிலிருந்தே சில மாற்றங்களுடன் நிகழ்த்திக் காட்டுவான்.

இப்ராஹீம்(அலை) அவர்களையும், அன்னை ஸாரா(அலை) அவர்களையும் அல்லாஹ் நினைத்திருந்தால் அந்த மன்னனுடையப் பிடியில் சிக்க வைக்காமல் வேறு வழியாக போக வைத்திருக்கலாம் ஆனாலும் இறை நம்பிக்கையும், பொறுமையும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் அந்த மன்னனிடம் இருந்ததால் அவர்களை இவர்களிடம் ஒப்படைக்கவே வல்ல அல்லாஹ் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தான்.

அதே நேரத்தில் அன்னை ஸாரா(அலை) அவர்களுடைய மானத்தில் கை வைத்து விடாமல் அங்கே ஒரு அற்புதத்தையும் (அவனுக்கு வலிப்பு ஏற்பட வைத்து) நிகழச்செய்து அதை நீக்கி விட இறைவனிடம் அன்னை அவர்களையே பிராத்திக்கக் கோரி வலிப்பும் நீங்கி விட அதற்காக அன்னை ஹாஜர்(அலை) அவர்களை பரிசாக்கி அவ்விருவரிடமும் ஒப்படைத்து அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் மூலமாக உலக பிரசித்திப் பெறும் வகையில் ஒரு நகரத்தை (மக்காவை) உருவாக்க திட்டமிட்டான் யாவரையும் மிகைத்தோனாகிய வல்லோன் அல்லாஹ்.

...'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''...புகாரி: 3358.

மூவரும் அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் வாழ வேண்டிய ஊர் அதுவல்ல என்பதால் அவர்கள் வாழ வேண்டிய ஊருக்கு அவர்களை இடம் பெயர்ந்து போக வைப்பதற்காக அவர்களுக்கு மத்தியில் பிரச்சனையை உருவாக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினான் இறைவன்

தொடர்ந்தது சோதனை
வெடித்தது பிரச்சனை இரு அன்னையர்களுக்கு மத்தியில் அதனால் அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் மனைவி ஸாரா (அலை) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது இப்ராஹீம்(அலை) அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக் கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள்...புகாரி:3365

அன்னை ஹாஜர்(அலை) அவர்களையும் பச்சிளம் பாலகராகிய குழந்தை இஸ்மாயில்(அலை) அவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி மக்கள் நடமாட்டம் இல்லாத, புற்பூண்டுகள் அறவே முளைப்பதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லாத மலைக் குன்றுகளும், மணல் முட்டுகளும் நிறைந்த ஒரிடத்தில் விட்டுத் திரும்புகிறார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

இவ்வாறு திரும்பியதும் அன்னை அவர்கள் தங்களது கணவரைப் பின் தொடர்ந்து ஆள் அரவமற்ற இந்தப் பகுதியில் விட்டுச் செல்வகின்றீர்களே என்று கேட்டதற்கு ? பதிலேதும் சொல்லாமல் சென்று கொண்டிருந்த இப்ராஹீம்(அலை) அவர்களை மேலும் பின் தொடர்ந்து செல்லாமல் ஈத தான் உங்கள் முடிவு எனில் எங்களை காக்க உலக இரட்சகன் அல்லாஹ் போதுமானவன் என்ற பதிலை அளித்து விட்டு அன்னை அவர்கள் பச்சிளம் குழந்தையாகிய தங்களுடைய மகனுடன் ஆள் அரவற்ற அந்த இடத்தில் வல்லோன் அல்லாஹ்வை நம்பித் தங்கி விடுகின்றார்கள்.

...அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்¡ர் கூடக் கிடையாது. இருந்தாலும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழமுள்ள தோல்பை ஒன்றையும் தண்¡ருடன் கூடிய தண்¡ர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டு விட்டு ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, 'இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டு விட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹிம்(அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். அதற்கு ஹாஜர்(அலை) அவர்கள், 'அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்...புகாரி 3364

என்னே ஒரு தியாகம்
இது போன்ற ஒரு காரியத்தை செய்ய யாருக்கு மனம் வரும் ? இத்தனை வருட காலங்கள் குழந்தை இல்லாமல் இருந்து கிடைக்கப் பெற்றக் குழந்தையை வனாந்திர பாலைவனத்தில் விட்டுத் திரும்ப யாருக்காவது மனம் வருமா ? இறைவனின் மீது கொண்ட அலாதியான நம்பிக்கை இவ்வாறு துணிந்து செய்ய அவர்களுக்கு மனம் வந்தது.

இவர்களுக்கு அவ்வாறான துணிச்சல் வந்தாலும் அன்னை அவர்களுக்கு அதே போன்ற துணிச்சல் வந்தது ஆச்சரியத்தின் உச்ச கட்டம்.

அந்த அளவுக்கு இறைநம்பிக்கையின் பிறப்பிடமாக முழு குடும்பமும் திகழ்ந்துள்ளது. இது பின் வரும் இறை நம்பிக்கையாளர்களின் குடும்பத்துக்கு எடுத்துக் காட்டு.

இஸ்லாத்தை உண்மைப் படுத்திய பிரார்த்தனை.
இறைவன் கூறிவிட்டான் அவன் பார்த்துக் கொள்வான் என்று வெறுமனேத் திரும்பவோ, அல்லது இனிமேல் இவர்களை என் வாழ்நாளில் எப்பொழுது பார்க்கப் போகின்றேனோ ? அல்லது பார்க்காமலேயே இறையடி சென்று விடுவேனோ ? என்று தேம்பி தேம்பி அழுது கொண்டு வீடு வராமல் மனைவி, மகனுடைய பார்வை மறைந்ததும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய முகம் கஃபாவை முன்னோக்கி தங்களுடைய மனைவி மகனுக்காகவும் அங்கே பிற்காலத்தில் தோன்றவிருக்கின்ற மக்களுடைய தேவைகளுக்காகவும் அல்லாஹ்விடத்தில் பட்டியலிட்டுக் கேட்டுப் பிரார்த்தித்தார்கள்.

14:37. எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில்,33 விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!246

படைத்தவனிடம் சடைவடையாமல் பிரார்த்திப்பதிலும், பிராத்தித்து முடித்ததும் பிரார்த்தனையை ஏற்றுக்கொள் என்று வலியுருத்;துவதிலும் இப்ராஹீம்(அலை) அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். அதை வல்ல அல்லாஹ்வே தன் திருமறையில் அவர்களுடைய உயர்ந்த பண்பை சுட்டிக் காட்டுகிறான்.  

14:38. எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்தியவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது.

14:39. இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.

14:40. என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

14:41. எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில்1 மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்) 247

இப்ராஹீம் நபி (அலை) அவர்களிடம் இருந்த ஆழமான இறைநம்பிக்கை, தன்னடக்கம், வாழ்வில் கடை பிடித்த பொறுமை, உலக மறுமை தேவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற்றத் தன்மை போன்றப் பண்புகளை இந்த ஹஜ்ஜூடைய காலத்தில் நினைவு கூர்ந்து நாமும் நம்முடைய வாழ்வில் கடைபிடித்தொழுக வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கிஅழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக