புதன், 3 அக்டோபர், 2012

இப்ராஹீம் (அலை) வாழ்க்கையில் படிப்பினை பெறும் பாடம்.


ஏக இறைவனின் திருப்பெயரால்...
وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِن قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاء عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ {78}

22:78....
உங்கள்
தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.295


படிப்பினை பெறும் பாடம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் ஏக இறைவனின் சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொல்வதில் அடைந்த சிரமங்கள் குறைத்து மதிப்பிட முடியாதவைகள் ஆகும். அவ்வாறு சிரமப்பட்டு நிருவிய சத்திய மார்க்கத்தை தங்களுடைய வாழ்விலும் கடை பிடித்தார்கள்.

எந்த விதமான மிரட்டர்லுக்கும்> அச்சுருத்தலுக்கும் அடங்காதது போல் அன்பான வேண்டுகோளுக்கும் இணங்கி ஏகத்துவத்தை விட்டு விடவுமில்லை> ஏகத்துவத்திற்கு எதிரான நிகழ்வுகளில் பங்கேற்கவுமில்லை> தவிர்க்க முடியாத நிர்பந்தத்திற்கும் கூட தலை சாய்த்து விடவில்லை.

உயிரேப் போனாலும் பரவா இல்லை என்று சத்தியத்தை மறுக்காமல் நெருப்புக்கு முன் துணிந்து நின்றவர்கள் நிர்பந்தத்திற்கு அடி பணிந்திடுவார்களா ? 

அவர்ளுக்கும் ஒரு நாள் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் இணை வைக்கும் ஆலயத் திரு விழாவில் (ஹந்தூரியில்) கலந்து கொள்; வேண்டி நிர்பந்தம் உருவானது. எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகின்ற மாதிரி அவர்களுக்கும் நிர்பந்தம் எற்பட்டது ஆனாலும் அந்த நிர்பந்தத்திற்கு அடி பணிய வில்லை.

தலைவலி> காய்ச்சல் போன்ற காரணத்தைக் கூறி தவிர்த்துக் கொண்டார்கள் இறுதி வரை அதில் கலந்து கொள்ள வில்லை.

பொய் பேசுவது இஸ்லாத்தில் பாவச் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் அல்லாஹ் நாடினால் அதை மன்னித்து விடுவான் இணை வைத்தலை மன்னிப்பானா ? மன்னிக்கவே மாட்டான் ! மன்னிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக அருள் மறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறி விட்டான். தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை> தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். 4:48.

பல விஷயங்களில் படிப்பினை பெறும் இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் இதுவும் சிறந்த படிப்பினையாகும்.

நிர்பந்தம் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு நிர்பந்தத்தை சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது ஆனால் அந்த நிர்பந்தங்கள் இது போன்ற இணை வைப்புகளைச் சார்ந்தவைகளாக இருக்கக் கூடாது.

இருந்தால் கண்டிப்பாக எதையாவது பொய் காரணத்தைக் கூறி தவிர்ந்துக் கொள்ள வேண்டும் கலந்து கொள்ளக் கூடாது என்பதையே மேற்காணும் இப்ராஹீம் நபி(அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வு படிப்பினை பெறுவதாக அமைந்;துள்ளது.

கத்தியை ஒருவரின் கழுத்தருகே வைத்துக் கொண்டு குஃப்ரை மொழியச் சொன்னால் உள்ளத்தால் இறைநம்பிக்கை நிறைந்திருக்கையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெறும் வாயளவே மொழிவதால் அது கொள்கையிலிருந்து அவரை வெளியேற்றி விடாது. அதிலிருந்து மீண்டும் சத்தியக் கொள்கைக்கே மீண்டு கொள்ளலாம் அல்லாஹ்வும் அதற்காக சொன்ன பொய்யை மன்னித்து விடுவான் இதற்கு ஏராளமான சான்றுகள் மார்க்கத்தில் காணக் கிடக்கின்றன.

ஆனால் இன்று சாதாரண இணை வைப்புக் காரியங்களாகிய மௌலுது> ஹத்தம் ஃபாத்திஹா> ஹந்தூரி விழா போன்றவைகள் கண்டிப்பாக தவிர்க்க முடிந்தவைகளே முடிந்தால் எதிர்த்தும் நிருத்த முடிந்தவைகளே அதை விட்டு அதில் கலந்து கொள்வதோ அல்லது அவற்றை தலைமை ஏற்று செய்து வைப்பதோ நிர்பந்தம் அல்ல.

சில நிர்பந்தங்கள் உண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான நிர்பந்தம் ஏற்டுவதுண்டு அதைப் பட்டியலிட முடியாது எந்த மாதிரியான் காரியம் நிர்பந்தம் என்பதையும் அறிந்து கொள்ள இதே இப்ராஹீம்(அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் படிப்பினை தருவதாக அமைந்துள்ளது.

ஒரு முறை இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மனைவி சாரா(அலை) அவர்களுடன் நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் ஒரு மன்னன் அழகியப் பெண்களைக் கண்டால் அது எவருடைய மனைவி என்றாலும் விட மாட்டானாம் ? அதே அவருடன் செல்வது அவரது சகோதரி என்றால் கருதி விட்டு விடுவானாம் ?.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1.(அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்த போது,) நான் நோயுற்றிருக் கின்றேன் என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்.30 2.(சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், இப்படிச் செய்தது யார்? என்று கேட்ட போது,) ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும். 3.(மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.32 அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார்? என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறை நம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டு விட்டான். நான், நீ என் சகோதரி என்று அவனுக்குத் தெரிவித்து விட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கி விடாதே என்று கூறினார்கள் அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்,) அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வ-ப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண் டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, என்ன நடந்தது? என்று கேட்டார்கள். அவர், அல்லாஹ் நிராகரிப்பாளனின்.... அல்லது தீயவனின்.... சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று (நபி -ஸல்- அவர்கள் சொன்னதாக ) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆதாரம்: புகாரி 3358.

மனைவியின் மானமா ? உண்மைப் பேசுவதா ? எது இந்த இடத்தில் சிறந்தது

ஒன்று மானம் பறிப் போக இருக்கின்ற சம்பவம்> மற்றொன்று மானமும் போகாது> உயிரும் போகாது. 

மனைவியின் மானத்தைக் காப்பாற்றுவதே சிறந்ததாகும். மான மரியாதைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மார்க்கம் இஸ்லாம்.

அல்லாஹ்வே தன் திருமறையில் இது உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கம் என்றும் இஸ்லாம் உங்களுக்கு சிரமமான மார்க்கம் இல்லை என்றும் கூறுகிறான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்.295 

இதிலிருந்து மேற்காணும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த இரு சம்பவங்கள் மூலமாக எது நிர்பந்தம்> எது நிர்பந்தம் இல்லை என்பதை நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் நிர்பந்தங்களை இரண்டாகப் பிரிந்து விளங்கிக் கொள்ளலாம். மார்க்க அறிவு கிடைக்கப் பெற்றோர் விளங்கிக் கொள்வர்.

இன்னும் ஏகத்துவ தந்தை இப்ரஹீம்(அலை) அவர்களுடைய வாழ்வில் படிப்பினை பெறும் ஏராளமான நிகழ்வுகள் இருக்கின்றன.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கிஅழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

1 கருத்து: